பிரியாணி சாப்பிட அழைத்த தோழி - பாலியல் அட்டூழியத்தால் நேர்ந்த கொடுமை!
சக தோழியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
திருப்பதி, பிரபல பல்கலைக்கழகத்தில் பி.எல். இறுதியாண்டு படித்து வருபவர் இளம்பெண் பிரணவ் கிருஷ்ணா. இவரும் கர்னூல் என்ற பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இதனால், பிரணவ் தனது தோழியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து செல்வதை பழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு அழைத்து சென்ற பிரணவ் கிருஷ்ணா, அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து அந்த பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சக தோழி கொடுமை
அந்த வகையில், தோழி போதையில் இருக்கும்போது பிரணவ் கிருஷ்ணாவின் கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து அதனை பிரணவ் கிருஷ்ணா வீடியோவாக எடுத்துள்ளார்.
பின் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிபப்டையில், கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரை பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.