விபத்தில் நண்பன் பலி: குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

Tamil nadu Accident
By Sumathi Nov 13, 2022 07:32 AM GMT
Report

விபத்தில் நண்பன் பலியானதால், குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் பலி

விழுப்புரம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சீனிவாசன்(20). பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள தனியார் கொரியர் நிறுவன்ம் ஒன்றில் வேலை பார்த்து வந்த அவர் தனது நண்பர் பிரபு(20) என்பவருடன் பைக்கில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி சென்றுள்ளனர்.

விபத்தில் நண்பன் பலி: குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்! | Friend Died In Accident Guilt Teenager Suicide

இதில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய பைக் கீழே விழுந்தது. அதில் விழுந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பிரபு மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நண்பனின் இறப்பை அறிந்த பிரபு, அதனால் மணமுடைந்துள்ளார்.

இளைஞர் தற்கொலை

இதனால், இரும்பு ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின், அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு வீடு திரும்பினார்.

ஆனால் தனது நண்பன் உயிரிழந்ததை எண்ணி மனவேதனையிலேயே இருந்துள்ளார். மேலும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இரவு வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.