மனைவிக்கு போதை மருந்து; ஆண்களை அனுமதித்த கணவன் - 10 வருடமாக பாலியல் கொடூரம்!

France
By Sumathi Jun 23, 2023 05:34 AM GMT
Report

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ய கணவன் அனுமதித்துள்ளார்.

போதை மருந்து

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவருக்கும் ஃபிராங்கோயிஸ் என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் கடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இரவு நேரத்தில் உணவில் போதைப்பொருளைக் கலந்து கொடுத்து

அவர் மயக்கமடையும் நிலையில், தன்னுடைய ஆண் நண்பர்களை வரவழைத்து மனைவியுடன் உறவில் ஈடுபட வைத்திருக்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கூறுகையில், பெண்கள் உடை மாற்றும்போது அதை வீடியோ எடுத்ததாக டொமினிக் மீது புகாரளிக்கப்பட்டது.

கணவன் வெறிச்செயல்

அதைத் தொடர்ந்து, அவரின் வீட்டைச் சோதனையிட்டபோது ஒரு ஹார்ட் டிஸ்க் கிடைத்தது. அதில் அவரின் மனைவியுடன் பல ஆண்கள் இருக்கும் வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது. விசாரிக்கையில், வரும் நண்பர்களின் வாசனையையோ அல்லது தவறவிட்டுப் போகும் ஆடைகளையோ

என் மனைவி கண்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அதிக வாசனை வரும் திரவியங்களைப் பூசிக்கொள்ளக் கூடாது என்றும், ஆடைகளை சமயலறைக்குள்ளேயே கழற்றிவிடவும் கூறுவேன். அவர்கள் ஒன்றாக இருக்கும்போது வீடியோ எடுப்பேன் எனத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

2011 முதல் 2020 வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் இது தொடர்ந்திருக்கிறது. இதுவரை 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 51 பேரை கைது செய்துள்ளனர்.