70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மருமகன் - பகீர் சம்பவம்!

Attempted Murder Sexual harassment Madurai
By Sumathi Jun 12, 2023 04:08 AM GMT
Report

70 வயது மூதாட்டியை உறவுக்கார இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(30). இவரது அத்தை, 70 வயது மூதாட்டியும், அதே பகுதியில் வசித்தார். இவருக்கு கணவர் இல்லை.

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மருமகன் - பகீர் சம்பவம்! | 70 Old Lady Raped By Her Young Relative Madurai

இந்நிலையில், மூதாட்டி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி பலி

தொடர்ந்து பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது உறவினர் அர்ஜுனனிடம் விசாரித்ததில்,

இரவு கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது திருட்டு உட்பட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.