அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த 70 வயது மூதாட்டி - குவியும் பாராட்டு
குஜராத் மாநிலம், கட்ச், மோடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரபரி (75). இவருடைய மைனைவி மல்தாரி (70).
இத்தம்பதிகளுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் மேலாகியும் குழந்தை இல்லை. ஆனால், இவர்களுக்கு பெற்றக்கொள்ள ஆசை இருந்து வந்துள்ளது. இதற்காக பல மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
வயதான நிலையும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இருவரும் விரும்பி மருத்துவரை அணுகி உள்ளனர். IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் மல்தாரி.
மருத்துவர் உதவியுடன் தற்போது இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து மருத்துவர் நரேஷ் கூறுகையில், வயதாகி விட்டதே என கூறும் போதும் தம்பதிகள் குழந்தை வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்றார்.
70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மல்தாரிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.