திருப்பதியில் இலவசமாக திருமணம் நடத்தலாம் - எப்படி தெரியுமா?
திருமலையில் எந்த செலவும் இல்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
இதில் பலருக்கும் இங்கு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். ஆனால் டிடிடி மூலம் அதிக செலவில்லாமல் இங்கு திருமணம் செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை இந்துக்களுக்கு இலவசமாக திருமணங்களை நடத்தி வைக்கிறது.
திருமணம்
கடந்த 15 ஆண்டுகளாக திருமலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இந்த திருமணங்கள் நடந்து வருகிறது. இதற்கு பெண் 18 வயது, ஆண் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். காதல் திருமணங்கள், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவோருக்கு வாய்ப்பில்லை.
மணமக்களின் பெற்றோர் கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஏன் வரவில்லை என்பதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொருளாதார வசதி இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமலையில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.