சரமாரி உயர்வு; திருமணத்திற்கு நகை வாங்க போறீங்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க
Marriage
Gold
By Sumathi
சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதிய வசதிகள்
ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 9,005க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நகை கடைகள் நகை வாங்க வசதியாக பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர். என்னவென்றால்,
- புதிய தங்க சேமிப்பு திட்டங்கள் அறிமுகம்.
- செய்கூலி நீக்கம்
- மொத்தமாக நகை வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தரப்படும்
- குறைந்த கிராம் அளவில் புதிய டிசைன்கள்
- 18 கேரட் தங்கம் விலை குறைவாக இருக்கும். அதனால் அதன் விற்பனையை ஊக்குவிப்பு
- மொத்த நகை வாங்குதலில் 40-45% எக்சேஞ்ச் வகை பரிவர்த்தனைகள் ஊக்குவிப்பு
மேலும், இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும். முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.