குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் ... கூடவே 3ஆண்டுகள் டேட்டாவும்!

Indian National Congress Smart Phones Rajasthan
By Sumathi Aug 21, 2022 10:15 AM GMT
Report

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் 3 ஆண்டுகள் டேட்டா வசதிகளையும் ராஜஸ்தான் அரசு இலவசமாக அறிவித்துள்ளது.

ராஜஸ்தான்  அரசு

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளில் இப்போதே கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் ... கூடவே 3ஆண்டுகள் டேட்டாவும்! | Free Smart Phones Heads Households Ashok Khelat

தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பட்ஜெட்டில், முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி,சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருக்கும்

இலவச ஸ்மார்ட் போன்கள்

1 கோடியே 35 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. அதோடு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்பு இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதற்காக திட்ட செலவு பன்னிரண்டாயிரம் கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இணைய இணாஇப்பு அளிப்பதர்கு மூன்று தொலை தொடர்பு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

 டேட்டாவும்...

அந்த மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. மாநிலத்தில் விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக முதற்கட்ட ஸ்மார்ட் ஃபோன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.