புல்டோசரை அனுப்பட்டா...ராஜஸ்தான் கலவரம் கருத்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து...
ராஜஸ்தானில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மற்றும் கரோலியில் ரமலான் பண்டிகையன்று மசூதிகளில் இருந்த ஒலி பெருக்கிகளை இந்துத்துவ அமைப்பினர் அகற்ற முயன்றனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், மோதல் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதுபோன்ற சூழலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம் என்றும், யாரால் வன்முறையை தடுக்க முடியுமோ அந்த அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சிறுபான்மையினர், தலித்துகளின் வீடுகளை அம்மாநில அரசு புல்டோசர்களை கொண்டு இடித்து வந்ததாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் கங்கனாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.