ஹாப்பி நியூஸ்..கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி - இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்!
கல்லூரி மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது.
இலவச ஸ்கூட்டி
பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக முன்னேறிவருகின்றனர். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளும் பெண்களையும் பெண் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதாவது, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து போன்ற திட்டங்களை கொடுத்த மாநில அரசு தற்போது மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இதில், பள்ளி மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம் உள்ளது. யுவ மகிளா அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் படிக்கும் பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
கல்லூரி மாணவிகள்
18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் பேசி வருகின்றனர். ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு இதுகுறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
இத்திட்டம் அமலுக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக இ-ஸ்கூட்டர் கிடைக்குமா? அல்லது படிப்பு வகை, குடும்ப வருமானம் போன்ற வரம்புகளைக் கொண்டுவருகிறதா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற, கல்விச் சான்று, அதாவது கல்லூரி சேர்க்கை அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.ஏனினும் ஏற்கனவே ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. அரசு குறைந்த வேக ஸ்கூட்டர்களை வழங்கினால் ஓட்டுநர் உரிமம் தேவைப்படாது என சொல்லப்படுகிறது.