பாஜக அபார வெற்றி; பொதுமக்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் ! பரவும் தகவல் உண்மையா?
பாஜக வெற்றியையொட்டி மக்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் என தகவல் பரவி வருகிறது.
பாஜக அபார வெற்றி
இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பரிசாக பா.ஜனதா கட்சி சார்பாக வாக்களித்த மக்களுக்கு அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் 3 மாதங்களுக்கு இலவச
செல்போன் ரீசார்ஜ்
'செல்போன் ரீசார்ஜ்' வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து, அதில் உள்ள இணைப்பை பின்தொடர்ந்தால் செல்போன் எண் கேட்கப்படுவதாகவும், வாடிக்கையாளரின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்தால் அதன்பிறகு எந்த செயல்பாடும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் நாடு முழுவதும் பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் முழுக்க முழுக்க போலியானது என உத்தரகாண்ட் போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளனர். இலவச ரீசார்ஜ் செய்வதற்கான எந்த அறிவிப்பையும் பா.ஜனதாவோ, பிரதமர் மோடியோ வழங்கவில்லை என்றும், எனவே அதுபோன்ற இணைப்புகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.