மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் விவரம் இதோ..

Government of Tamil Nadu Chennai
By Sumathi Dec 17, 2024 08:00 AM GMT
Report

 மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்த அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து

சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், வரும் 21-ம் முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

chennai bus

இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி-2025 முதல் ஜூன்-2025 வரை பயன்படுத்தக்கூடிய,

ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் / புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வரும் 21 டிசம்பர்-2024 முதல் 31 ஜனவரி-2025 மாதம் வரை விடுமுறையின்றி,

அனைத்து நாட்களும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை வழங்கப்படும். அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

senior citizens free bus

சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை, etc) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன், தங்களின் தற்போதைய Passport size அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னைக்கு வரப்போகும் பேராபத்து.. காலநிலை மாற்றம்.. அலர்ட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சென்னைக்கு வரப்போகும் பேராபத்து.. காலநிலை மாற்றம்.. அலர்ட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் மையங்கள்;

வ. எண் பணிமனை / பேருந்து நிலையங்கள்

1 அடையாறு 2 பெசன்ட் நகர் 3 திருவான்மியூர் 4 மந்தைவெளி 5 தி.நகர் 6 சைதாப்பேட்டை 7 சைதாப்பேட்டை பே.நி 8 மத்திய பணிமனை 9 சென்ட்ரல் இரயில் நிலையம் 10 பிராட்வே 11 குரோம்பேட்டை-1 12 பல்லாவரம் 13 ஆலந்தூர் 14 கிண்டி எஸ்டேட் 15 அய்யப்பன் தாங்கல் 16 வடபழனி 17 கே.கே.நகர் 18 ஆதம்பாக்கம் 19 வேளச்சேரி 20 அண்ணாநகர் 21 கோயம்பேடு 22 அம்பத்தூர் எஸ்டேட் 23 அம்பத்தூர் ஓ.டி 24 ஆவடி 25 அயனாவரம் 26 வில்லிவாக்கம் 27 தண்டையார்பேட்டை-1 28 சுங்கச்சாவடி 29 எண்ணூர் 30 வியாசர்பாடி 31 M.K.B.நகர் 32 மாதவரம் 33 பாடியநல்லூர் 34 செங்குன்றம் 35 தாம்பரம் - மெப்ஸ் பே.நி. 36 பூந்தமல்லி 37 பெரம்பூர் பே.நி 38 வள்ளலார் நகர் 39 செம்மஞ்சேரி 40 திருவொற்றியூர் 41 கிளாம்பாக்கம் 42 குன்றத்தூர்