சென்னைக்கு வரப்போகும் பேராபத்து.. காலநிலை மாற்றம்.. அலர்ட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Tamil nadu Chennai Anna University
By Swetha Dec 16, 2024 03:00 PM GMT
Report

 சென்னைக்கு ஆபத்து நெருங்கிக்கொண்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராபத்து.. 

சென்னையில் நடந்து வரும் பல்வேறு கட்டுமான பணிகளால் பருவமழை ஏற்படும் போது பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் கடல் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு வரப்போகும் பேராபத்து.. காலநிலை மாற்றம்.. அலர்ட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Chennai Is Under Huge Risk Cccdm Reports Says

அந்த வகையில், காலநிலை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மை மையம் சேகரித்த தகவல்கள் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் காலநிலை மாறுபாடு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதையொட்டி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்தது.

இதனை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள், வெப்பநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, மாசுபாடு அச்சுறுத்தல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கக்கூடிய நகரமாக சென்னை இருக்கிறது.

2040க்குள் சென்னைக்கு காத்திருக்கும் பேராபத்து இது தான்..சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை!

2040க்குள் சென்னைக்கு காத்திருக்கும் பேராபத்து இது தான்..சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை!

அதிர்ச்சி தகவல்

இதனுடன் ஆவடி, தாம்பரம் ஆகியவையும் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளன. ஆனால் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் அளவிற்கு செயல் திட்டங்கள் உடன் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மூன்றும் தயாராகி இருப்பது கவனிக்கத்தக்கது.

சென்னைக்கு வரப்போகும் பேராபத்து.. காலநிலை மாற்றம்.. அலர்ட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Chennai Is Under Huge Risk Cccdm Reports Says

அதாவது, பசுமை கட்டடங்கள், குப்பைகள் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை போன்றவற்றில் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகரமாக தஞ்சாவூர் உள்ளது.

இங்கு வறட்சி அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டம் மிகவும் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இருப்பினும் காலநிலை மாற்றத்தால் குறைவான பாதிப்பிற்கு ஆளாகும்

. உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார கட்டமைப்புகள், குடிநீர் விநியோகம், போதிய எண்ணிக்கையில் மருத்துவமனைகள் போன்றவற்றில் திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆய்வின் படி, அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடிய நாட்களின் எண்ணிக்கை வரக்கூடிய நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.