2040க்குள் சென்னைக்கு காத்திருக்கும் பேராபத்து இது தான்..சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை!

Tamil nadu Chennai
By Swetha Aug 03, 2024 09:15 AM GMT
Report

2040க்குள் சென்னையின் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என சி.எஸ்.டி.இ.பி எச்சரித்துள்ளது.

சென்னைக்கு ஆபத்து

காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் கடல் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள கடலோர நகரங்களுக்கு ஆபத்து அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2040க்குள் சென்னைக்கு காத்திருக்கும் பேராபத்து இது தான்..சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை! | Chennai Land Area Will Sink Into Sea By 2024

இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவு திடல், குடியரசு பொன் விழா நினைவு தூண், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் ஆகிய இடங்கள் கடல் மட்ட உயர்வால் மூழ்கும் அபாயம் இருப்பதாக சிஎஸ்டிஇபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் 3 மாசம் தான்? சென்னை வரும் மிக பெரிய ஆபத்து - அதிரவைக்கும் ரிப்போர்ட்

இன்னும் 3 மாசம் தான்? சென்னை வரும் மிக பெரிய ஆபத்து - அதிரவைக்கும் ரிப்போர்ட்

சிஎஸ்டிஇபி எச்சரிக்கை

முன்னதாக 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 570 நகரங்களில் உள்ள சில நிலப்பரப்புகள் கடலில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் அந்த ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

2040க்குள் சென்னைக்கு காத்திருக்கும் பேராபத்து இது தான்..சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை! | Chennai Land Area Will Sink Into Sea By 2024

1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 செ.மீ. என்று ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில்,

மும்பையில்தான் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.