ஆதார் கார்டு அலெர்ட்; முடிவடையுடம் அவகாசம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
ஆதார் விவரங்களை லவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ளது.
ஆதார் விவரங்கள்
ஆதார் கார்டு வங்கிச் சேவை முதல் பள்ளி-கல்லூரிகளில் சேர்க்கை பெறுவது வரை பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே, அதில் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.
இதில் ஏதேனும் மொபைல் நம்பர், புகைப்பட மாற்றம், பெயர் போன்ற முக்கியமான அப்டேட்களுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டில் அப்டேட் செய்யும் வசதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
அவகாசம் முடிவு
அதன்படி, உங்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அதை இலவசமாகப் புதுப்பிக்க சில நாட்கள் மட்டுமே உள்ளன. மார்ச் 14ஆம் தேதி வரை இந்த அனைத்து விஷயங்களையும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.
இந்த தேதிக்குப் பிறகு நீங்கள் எந்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்க ஆதார் அமைப்பின் (UIDAI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று மாற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஆதாரை புதுப்பிக்க வேண்டியது முக்கியம். இதன்மூலம், மோசடிகளை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.