திடீரென ரத்து செய்யப்படும் ஆதார் - அவ்வாறு நடந்தால் என்ன செய்யவேண்டும்?
ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..
ஆதார் அட்டை
இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில், ஆதார் அட்டை திடீரென ரத்து செய்யப்படுவதான தகவலால் ரேஷன் முதல் வங்கி வரை சேவைகள் முடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், ராஞ்சியில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து, கடந்த சில நாட்களாக ஜமால்பூர் தொகுதியின் ஜௌகிராம், அபுஜஹாதி பகுதியில் வசிக்கும் 60 பேருக்கும், ஜூஹிஹாதி கிராமத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு தகவல்
அந்த கடித்ததில், அட்டையின் விதிமுறை 28-ல் ஆதார் அட்டை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்றும், அடிப்படையில், ‘வெளிநாட்டவர்’ அல்லது வசிப்பிட ஆவணங்கள் திருப்திகரமாக இல்லை என சந்தேகிக்கப்பட்டால், ஆதார் அட்டை இந்தப் பிரிவின் கீழ் செயலிழக்கச் செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இவ்வாறு கடிதம் வந்தல் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அதார் தொடர்பான பிரச்சனைகளுக்கு 1947 என்ற இலவச எண்ணை அழைக்கலாம்.
மேலும், இந்த நேரங்களில் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஆதார் திருத்த மையத்திற்கு உடனே சென்று வீட்டு முகவரியைப் புதுப்பித்து கூடுதலாக குடியுரிமைக்கான சான்று மற்றும் பல ஆவணங்களை வழங்க வேண்டும். சரிபார்த்த பின் உங்கள் ஆதார் அட்டை மீண்டும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.