கொளுத்தும் கோடை வெயில்; இலவச ஏசி - தமிழக அரசு விளக்கம்

Governor of Tamil Nadu TN Weather
By Sumathi May 14, 2025 04:31 AM GMT
Report

தமிழக அரசின் இணையதளம் மூலம் இலவச ஏசி வழங்கப்படுவதாக தகவல் பரவியது.

இலவச ஏசி?

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதிய வேளைகளில் பல வீடுகளில் மக்கள் வெப்பபத்தில் கொடுமை தாங்காமல் தவித்து வருகின்றனர்.

tn gov

இந்நிலையில் இந்த வெப்பத்தை தணிக்க 'கோடைகால வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது.

இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்களை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வெட்கம், மானமெல்லாம் இல்லை; தலைகுனியுங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கொதிப்பு

வெட்கம், மானமெல்லாம் இல்லை; தலைகுனியுங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கொதிப்பு

அரசு விளக்கம்

தற்போது இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே.

air conditioner

மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.