Friday, Jul 11, 2025

43 ஆண்டுகால ரூல்ஸ்; மாற்றிய பள்ளிக்கல்வித்துறை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Tamil nadu Education
By Sumathi 2 months ago
Report

தேர்வு வினாத்தாள் மறுகூட்டல் குறித்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

வினாத்தாள் மறுகூட்டல் 

பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லை என்றால்

43 ஆண்டுகால ரூல்ஸ்; மாற்றிய பள்ளிக்கல்வித்துறை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க | Tn Education Department Changes Revaluation

மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பின் 12ம் வகுப்பு தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மட்டும் மாணவ, மாணவிகள் விரும்பினால் ஜெராக்ஸ் நகல் எடுத்து கொள்ளவும்.

தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-ல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ம் ஆண்டு பிற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஆகிய 4 பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-ல் அனுமதி தரப்பட்டது.

பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது - அண்ணாமலை ஆவேசம்

பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது - அண்ணாமலை ஆவேசம்

விதிமுறை மாற்றம்

இந்த அறிவிப்பு 2009-ம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இனிவரும் கல்வியாண்டுகளில்12ம் தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் தேர்வர்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து,

43 ஆண்டுகால ரூல்ஸ்; மாற்றிய பள்ளிக்கல்வித்துறை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க | Tn Education Department Changes Revaluation

அதை பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென தேர்வுத் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நடைமுறையை பரிசீலித்த அரசு அதனை ஏற்றுக்கொண்டது.

அதில் மே 13 முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (http://www.dge.tn.gov.in) மே 12-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.