இதை மறந்துடாதீங்க.. ஆதார் புதுப்பிப்பு- மத்திய அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!
நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் கார்டுப் புதுப்பிக்கச் செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
ஆதார் கார்டு
இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் கார்டு பெற்றுள்ளனர். இந்த ஆதார் கார்டு மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற முடியும்.
இது மட்டுமில்லாது ஆதார் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்க ஆதார் கார்டுடன் பாண் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
மேலும் ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்தது.
மத்திய அரசு
அதனடிப்படையில் வங்கி உள்ளபட அணைத்து முக்கிய ஆவணங்களுடன் ஆதார் இணைக்கும் செயலில் மக்கள் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் கட்டணமின்றி ஆதார் கார்டுடை புதுப்பிக்கச் செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
ஏற்கனவே பல முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 14ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.