கர்நாடகா சட்ட சபை தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு
கர்நாடகாவின் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்ட சபை தேர்தல்
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது.

24-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
இதனிடையே காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக குமார் என்பவர் போலி ஆவணங்களை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும்,

சட்ட விரேதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan