அதிபர் கன்னத்தில் அறைந்த மனைவி? காரணம் என்ன - வைரலாகும் வீடியோ!
அதிபரின் முகத்தில் அவரது மனைவி அறைவது போன்ற காணொளி வைரலாகி வருகிறது.
அறைந்த மனைவி?
பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மனைவி பிரிஜிட் மக்ரோனுடன் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இருவரும் வியட்நாமுக்கு வந்தனர். ஹனோய் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் முகத்தில் அவரது மனைவி அறைவது போன்ற காணொளி வெளியானது.
அதில் விமானத்தின் கதவு திறந்த அடுத்த நொடியே, மேக்ரான் முகத்தை சிவப்பு வண்ண ஆடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த சில நிமிடங்களில் சிவப்பு வண்ண ஆடையுடன் மேக்ரான் மனைவி பிரிஜிட்டி வெளியே வரும் காட்சிகளும் உள்ளன.
வைரல் வீடியோ
இதனையடுத்து அதிபரும் அவரது மனைவியும் ஒன்றாக படிக்கட்டுகளில் இறங்கினர். அப்போது, கைகளை கோர்ப்பதற்காக அதிபர் இம்மானுவேல் தனது கைகளை நீட்டினார். ஆனால், பிரிஜிட் மக்ரோன் அதனை நிராகரித்து நடந்து சென்றார்.
#BREAKING: Like #Rafael, the #FrancePresident also fell. After being #Slapped by his #wife, his reputation was shattered.🫣#Modi proved to be a #Disaster for #France. pic.twitter.com/WXBoebm74Y
— Ahmed Mughal (@AhmedZubie) May 26, 2025
இந்நிலையில் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் என்று அதிபருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.