18 முதல் 25 வயதினருக்கு ஆணுறை இலவசம் - அரசு அறிவிப்பு!

France
By Sumathi Dec 11, 2022 08:03 AM GMT
Report

18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு ஆணுறை இலவசம் என பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.

தேவையற்ற கர்ப்பம்

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான். இவர் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திரமாகச் சிந்திக்கும் நாட்டில் அனைவரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு.

18 முதல் 25 வயதினருக்கு ஆணுறை இலவசம் - அரசு அறிவிப்பு! | France Makes Condoms Free For Teenagers

மக்ரோன் கூறுகையில், '18 முதல் 25 வயதுடைய அனைத்து இளைஞர்களுக்கும் அரசு மருந்தகங்கள் மூலம் இலவச ஆணுறைகளை வழங்கும். இது உண்மையில் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஒரு சிறிய புரட்சி. இந்த ஆண்டு முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும்

இலவச ஆணுறை

இலவச கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. உண்மையில் பல இளம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் என்ன செய்வது அல்லது அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை.

18 முதல் 25 வயதினருக்கு ஆணுறை இலவசம் - அரசு அறிவிப்பு! | France Makes Condoms Free For Teenagers

மேலும், சில பெண்கள் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கருக்கலைப்பு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அதன் முறைகள் அல்லது சிகிச்சைகளை பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.