303 இந்தியர்களுடன் சென்ற விமானம்; அவசர தரையிறக்கம் - பரபர பின்னணி!
303 இந்தியர்களுடன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணம்
துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Vatry விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில் இந்தியர்கள் தான் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து பரபரப்பு நிலவியது.
அவசர தரையிறக்கம்
தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், `துபாயிலிருந்து 303 பேருடன் (பெரும்பாலானோர் இந்தியர்கள்) நிகரகுவாவுக்குச் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் நலனை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளது.