நடுவானில் செல்போன் வெடித்ததால் பரபரப்பு - அவசர அவசரமாக விமானம் தரையிறக்கம்
Dibrugarh
assamtodelhiflight
indigo6E2037
cellphonecatchfire
By Swetha Subash
விமானத்தில் பயணம் செய்த பயணியின் செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து டெல்லி புறப்பட்ட 6E 2037 இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணியின் கைப்பையில் இருந்து புகை வருவதை விமான பணியாளர் பார்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட விமான ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் செல்போனில் இருந்து வந்த தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.