பெற்ற மகள்கள் 3 பேரிடம் தந்தை வெறிச்செயல் - அதிரவைக்கும் சம்பவம்!

Attempted Murder France Crime
By Sumathi Nov 27, 2023 12:05 PM GMT
Report

தந்தை, பெற்ற மகள்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை வெறிச்செயல்

பிரான்ஸ், ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வருபவர் 41 வயது நபர். இவருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்கள் இருந்தனர். இந்நிலையில், 3 பேரையும் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

father-stabbed-his-3-daughters

தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவர்களது உடல்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன்பின், டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு அந்த நபர் சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாயை காப்பாற்ற முயன்ற மகள், 107 முறை கத்தியால் குத்திய சைக்கோ தந்தை - கொடூர கொலை!

தாயை காப்பாற்ற முயன்ற மகள், 107 முறை கத்தியால் குத்திய சைக்கோ தந்தை - கொடூர கொலை!

கைது

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அதனையடுத்து, அவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

france

முன்னதாக, 2021ஆம் ஆண்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என அவர் குற்றம்சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.