ரத்தம் சொட்ட, சொட்ட தந்தையின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம்

கொலை கைது தந்தை மகன் father-murder son-arrest police-investigation
By Nandhini Apr 18, 2022 09:44 AM GMT
Report

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, வேப்பூரைச் சேர்ந்தவர் இக்பால். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். இக்பால்லின் மனைவி இறந்துவிடவே, தன் மகனுடன் வசித்து இவர் வசித்து வந்துள்ளார். ஆனால், தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை இவர்கள் இருவரும் மறுபடியும் சண்டை வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மகன் இம்ரான் தந்தை என்றும் பாராமல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக இக்பாலை வெட்டிச் சாய்த்தார். ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே சரிந்த இக்பால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இக்பால் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இம்ரானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ரத்தம் சொட்ட, சொட்ட தந்தையின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம் | Father Murder Son Arrest Police Investigation