இரண்டாக பிளந்த படகு - கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி!
படகு விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகு விபத்து
பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் படகு ஒன்று செல்ல முயன்றது. திடீரென ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் 6 குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் பலி
அதனைத் தொடர்ந்து கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் விசாரணையில், படகு அதிகபடியான சுமையை சுமந்து சென்றதே விபத்துக்கான அடிப்படைக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக,இந்த ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முற்பட்ட 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.