நடுங்கவைத்த சம்பவம்; டாஸ்மாக் கடைகள் மூடல் - குற்றவாளியை நெருங்கிய தனிப்படை!
4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் படுகொலை
திருப்பூர், பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இரவு வீட்டு வாசல் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
டாஸ்மாக் மூடல்
மேலும், கொலை செய்த 3 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய கொலையாளியான வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் உடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.