சொந்த இடத்தில் அப்படி செய்தவர்களை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகராறு
திருப்பூர், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). பாஜக நிர்வாகியான இவர் அதே பகுதியில் அரிசிக் கடை வைத்துள்ளார். இவருக்குச் சொந்தமான நிலத்தில் இளைஞர்கள் சிலர் இரவு மது அருந்தி உள்ளனர்.
அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதில், இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை இளைஞர்கள் சராமரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் ஓடி வந்து தடுத்துள்ளனர்.
நால்வர் கொலை
அப்போது, அவர்களையும் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அதில் நால்வரும் அங்கேயே உயிரிழந்தனர். அதனையடுத்து இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
ஆனால், சடலத்தை கிராம மக்கள் எடுக்கவிடாமல், கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதில், கொலை செய்த கும்பலில் குட்டி (எ) வெங்கடேசன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாரின் அரிசி கடையில் வேலை செய்தது தெரியவந்தது.