இனி.. ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - எப்போது தெரியுமா?
ரேசன் கடைகளில் இனி செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி
சென்னை, கலைவாணர் அரங்கில் நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தல் என்பது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி
மேலும் வரும் ஏப்ரல் 1 முதல் மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் தமிழக அரசின் ஆணையின் படி பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். இந்த அரிசியில், இரும்புச் சத்து, போலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்து உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு வாணிப கழகத்தில் 755 அரவை ஆலைகள் உள்ளன என்றும் நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.