சுயேட்சையாக இந்த சின்னத்தில் தான் போட்டி - அறிவித்த ஓபிஎஸ்
தான் கேட்ட இந்த கேள்விக்கு தான் தன் மீது பாட்டில் எடுத்து வீசினார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
ஓபிஎஸ் போட்டி
ராமநாதபுர தொகுதியில் சுயேட்சையாக பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது வருமாறு,உயர்நீதிமன்றத்தில் வந்துள்ள தீர்ப்பு என்பதை விட உச்சநீதிமன்றத்தின் சிவில் suite'இல் வழங்கும் தீர்ப்பு தான் எடுத்துக்கொள்ளப்படும்.
அதுக்கு தான் பாட்டில்...
முதலில் பக்கெட் சின்னம் கேட்டேன், அடுத்தபடியாக பலாப்பழம் சின்னமும், அதனை தொடர்ந்து திராட்சை சின்னம் கேட்டுள்ளேன். முன்னாள் அமைச்சர்கள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது காலத்தின் சூழல், அவர்களை நான் தவறாக பார்க்கவில்லை.
கட்சியின் தலைமை பதவிக்கு வருவதற்காக இபிஎஸ் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து தான் கேள்வி கேட்டேன், அதற்கு எனக்கு கிடைத்த பரிசு என் மீது பாட்டில் கொண்டு எரிந்தது.
வெற்றி என்பது பிரகாசமாக உள்ளது. அது தேர்தல் முடிவுகளில் தெரியும்
இவ்வாறு ஓபிஎஸ் பேசி சென்றார்.