நெருங்கும் தேர்தல்...நெருக்கடியில் ஓபிஎஸ் - ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!!
தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்படுள்ள ஓபிஎஸ், தொடர்ந்து நீதிமன்றங்களையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகின்றார். கட்சியை மீட்டெடுக்க அவர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அமைத்து இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
ராமநாதபுர வேட்பாளராக சுயேட்சையாக களமிறங்கும் அவர் தற்போது தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம் அதிரடி
கட்சியின் சின்னம், பெயர், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு தடை கோரி, அதிமுகவின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்து வழக்கில் அவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பிற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓபிஎஸ். தற்போது இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், இடைக்கால தீர்ப்பு வழங்கமுடியாது என குறிப்பிட்டு, ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,தேர்தல் முடிந்த பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்து ஜூன் 10-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.