33 ஆண்டு அரசியல் வாழ்க்கை; முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒய்வு பெற்றார்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்கை இன்றுடன் முடிவு பெறுகிறது.
மன்மோகன்சிங்
கடந்த 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதிச் செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் போன்ற பதவிகளை கையாண்டவர் மன்மோகன் சிங் பின்னர் நிதியமைச்சர் மற்றும் இரண்டு முறை பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
இதை தொடர்ந்து, 5 முறை அசாமில் இருந்து மக்களவை எம்.பியாக தேர்வான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.
ஒய்வு பெற்றார்
கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மக்களவை எம்.பி யாக தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட மன்மோகன் சிங், 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
மேலும், மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.