அவ்வளவுதானா.. முடிவுக்கு வருகிறதா சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் அத்தியாயம்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
சஞ்சு சாம்சன் கேரியர் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டிய இடத்தில் ரிஷப் பண்ட், தீபக் ஹுடா என பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. நல்ல திறமையும், ஃபார்மும் இருந்த போதும், சஞ்சு சாம்சன் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
மேலும், சாம்சன் டி20 தொடர் முழுவதும் அணியில் இடம் பெறவில்லை. அதன்பின், ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில் சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். அதில் 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருடன் 96 ரன்கள் எடுத்தார்.
கனேரியா ஆதங்கம்
இதுகுறித்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா, அம்பதி ராயுடுவின் கேரியர் இதேபோல் முடிந்தது. அவர் நிறைய ரன்கள் எடுத்தார், ஆனால் அவர் அணியில் இடம் பெறவில்லை. காரணம் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் உள் அரசியல். வீரர்களிடையே விருப்பு வெறுப்பு உள்ளதா? ஒரு வீரர் எவ்வளவு பொறுத்துக்கொள்ள முடியும்?
அவர் ஏற்கனவே நிறைய பொறுத்துக்கொள்கிறார் மற்றும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அதிக ரன்களை பெறுகிறார். ஒரு நல்ல வீரரை நாம் இழக்க நேரிடலாம், ஒவ்வொருவரும் அவரது ஆட்டத்தை பார்க்க விரும்புகிறார்கள” என பிசிசிஐயை குற்றம் சாட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு தரவில்லை எனக்கூறி கேரளாவில் போராட்டம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.