அதிமுகவில் இணைந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் - அதிரடி காட்டும் ஈபிஎஸ்
அமமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஈபிஎஸ் அதிரடி
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியிலிருந்து சில நிர்வாகிகள் இ.பி.எஸ். அணிக்கு மாறினர்.
இந்நிலையில், இன்று அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள்
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னதாக நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.