எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு : பாஜக நிர்வாகிகள் கைது
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் பாஜகவினர்:
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக அடுத்ததடுத்த நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதற்கு பாஜகவில் சிலர் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இபிஎஸ் புகைப்படம்
பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டினர். அதில் எங்கள் முதல்வர் அண்ணாமலை என்றும், கூட்டணி தர்மத்திற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
எடப்பாடி புகைப்படம் எரிப்பு
மேலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த சம்பவங்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் தூத்துக்குடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இபிஎஸ் புகைப்படத்தை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகைப்படங்களை எரித்த தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 4 பேரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செயதனர்.