முன்னாள் தமிழக ஆளுநர், உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி 'பாத்திமா பீவி' காலமானார்!
தமிழக முன்னாள் ஆளுநரும் , உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியுமான 'பாத்திமா பீவி' உடல்நலக்குறைவால் காலமானார்.
பாத்திமா பீவி
தமிழக முன்னால் ஆளுநர் 'பாத்திமா பீவி' உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 1997ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இவர் தமிழக ஆளுநராக பதவி வகித்தார். பாத்திமா பீவி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 30 பிறந்தார்.
திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்த இவர் 1950ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் துவக்கினார். பின்னர் 1958ம் ஆண்டு கேரள கீழ்நிலை நீதித்துறை பணியில் சேர்ந்த இவர், 1968ம் ஆண்டு துணை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
தலைவர்கள் இரங்கல்
இதனையடுத்து 1972ம் ஆண்டு முதன்மை நீதித்துறை நீதிபதியாகவும், 1974ம் ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1989ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். மேலும், இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் ஆகிய பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பாத்திமா பீவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.