அதிர்ச்சி செய்தி..! பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் காலமானார்.
20 வயதில் தொடங்கிய அரசியல் பயணம்
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக 5 முறை பதவியில் இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். இவர் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர், இவரது கட்சியின் முன்னேற்றத்துக்காக பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
இவர் லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர் தனது 20 வயதிலேயே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மேலும் இவர் தனது 30 வயதில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார். தொடர்ந்து அவர் பதவியில் இருந்த காலங்களில் திறம்பட செயலாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
உடலநலக்குறைவால் காலமானார்
இந்நிலையில் இவர், பஞ்சாப் மாநிலத்தின் இளம் வயது முதல்வர் என்ற பெருமையும் பெற்றவர். தற்போது இவரது 95 வயதில், மூச்சு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, இந்திய அரசியலின் மாபெரும் தலைவர் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.