பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்
பாகிஸ்தானில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நுார் மெஸ்கன்சாய் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தார்.
நீதிபதி மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நுார் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தான் உள்ள மசூதியின் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்க வந்த பயங்கரவாதிகள் முஹம்மது நுார் மெஸ்கன்சாய் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்ட அப்பகுதி வாசிகள் மருத்துமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள் முன்னாள் நீதிபதி மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.