முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்திற்கு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, அதன் உச்சியில் நிற்கின்றனர். கேத்தி கருப்பு நிற பிகினி உடையுடன் காணப்படுகிறார்.
இதனைக் கண்ட நிரூபர் ஒருவர் கூறுகையில், கேத்தி தன்னுடைய படகை மற்றொரு படகின் அருகே கொண்டு வந்து நிறுத்தினார். இதன்பின்னர் 2 பேரும் அவர்களுடைய வேலையை தொடங்கி விட்டனர். கேத்தி யாருடன் இருக்கிறார் என முதலில் சரியாக தெரியவில்லை.
பாடகியுடன் நெருக்கம்
ஆனால், அந்த நபரின் கையில் இருந்த டாட்டூவை பார்த்த பின்னரே அவர் ஜஸ்டின் ட்ரூடோ என உடனடியாக புரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இருவரும் கடந்த ஜூலை முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
CALIFORNIA GIRLS WE'RE UNFORGETTABLE ❤️🔥 pic.twitter.com/lf46GFaBRL
— Katy Perry Daily Brasil (@katydailybrasil) October 11, 2025
முன்னதாக, மான்ட்ரீல் நகரில் இரவு விருந்து ஒன்றிலும் இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானின் தலிபான் படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பேரிழப்பு :எல்லைப்பகுதியில் கடும் பதற்றம் IBC Tamil
