முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை..!
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஷ்வரி ஹைதரபாத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
என்.டி.ராமாராவ் மகள்
என்.டி.ராமாராவின் நான்கு மகள்களில் உமா மகேஷ்வரி நான்காவது மகள். இவர் தான் என்.டி.ராமாராவின் இளைய மகள். உமா மகேஷ்வரியும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மனைவியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் உமா மகேஷ்வரி.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடலை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.