முன்னாள் முதல்வர் காங்கிரஸில் இருந்து விலகல் - பாஜகவில் இணைகிறார்?
முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கிரண் குமார் ரெட்டி
2010இல் இருந்து 2014 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக கிரண் இருந்தார். பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் அரசு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியது.

முன்னதாக அதிருப்தி தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் 2018ல் கட்சியை கலைத்து காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில், 5 ஆண்டுகள் கடந்த நிலையில் காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
காங்கிரஸில் விலகல்
மேலும், விரைவில் கிரண் குமார் டெல்லி சென்று பாஜகவின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், குலாம் நபி ஆசாத், அனில் கே. அந்தோனி உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.