மணப்பெண்களை ஷாப்பிங் செய்யும் இளைஞர்கள் - மிரளவைக்கும் சம்பவங்கள்
ஆன்லைன் திருமணத் திட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணப்பெண் ஷாப்பிங்
சீனாவில் ஒரு குழந்தை கொள்கை இருந்தது. எனவே, மக்கள் பலரும் ஆண் குழந்தைகளையே பெற விரும்பினர். இதனால் பாலின ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. தொடர்ந்து இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது.
மணப்பெண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து, சட்டவிரோதமாகச் சீனாவிற்கு அழைத்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி சில கிரிமினல் கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
தூதரகம் எச்சரிக்கை
வங்கதேசத்தில் பெண்களைக் கடத்தி சீன இளைஞர்களுக்குத் திருமணத்திற்கு விற்றுவிடுகிறார்க இந்நிலையில் சட்டவிரோதமாக நடக்கும் இந்த திருமணங்களைத் தான் சீன தூதரகம் எச்சரித்துள்ளது. சீனாவுக்கு வெளியே உள்ளவர்களைத் திருமணம் செய்ய உதவும் நிறுவனங்கள் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற மணப்பெண் ஷாப்பிங் மோசடிகளைச் செய்வதாக விளம்பரப்படுத்துவோர் குறித்து தகவல் தெரிய வந்தால் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவும்.
வங்கதேசத்தில் சட்ட நடைமுறைகள் என்பது மிக மெதுவாக இருக்கும். இதனால் பெண்களைக் கடத்தும் விவகாரத்தில் சீன நாட்டினர் சிக்கினால் பல ஆண்டுகள் வங்கதேச சிறைகளில் இருக்கும் சூழல் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.