வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 பேர் வெறிச்செயல்!

Sexual harassment Spain Nepal
By Swetha Mar 02, 2024 01:44 PM GMT
Report

வெளிநாட்டு பெண் ஒருவர் 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணி

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவில் சுற்றுலா பயனம் மேற்கொள்ள வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஜார்கண்ட் வந்த அவர்கள் அடுத்ததாக நேபாளம் செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 பேர் வெறிச்செயல்! | Foreign Tourist Gang Rape 7 Man

இதனையடுத்து, தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கி.மீ தொலைவில் இருந்த ஹன்ஸ்திஹா காவல் நிலைய பகுதி அருகே அவர்களது இரவு நேரத்தை கழிக்க ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

கணவர் கண்முன்னே கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பாகிஸ்தானில் பயங்கரம்!

கணவர் கண்முன்னே கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பாகிஸ்தானில் பயங்கரம்!

கொடூரச்செயல்

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 7 பேர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக  கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை - 7 பேர் வெறிச்செயல்! | Foreign Tourist Gang Rape 7 Man

இதனை தடுக்க முயன்ற அப்பெண்ணின் கனவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தும்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.  மேலும்,  மற்ற 5 குற்றவாளிகளையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.