ஹோட்டலில் 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்!

Sexual harassment Maharashtra Child Abuse Crime
By Sumathi Dec 29, 2022 05:40 AM GMT
Report

சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா, புனேயை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவருக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றார். பின்னர் லாட்ஜில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஹோட்டலில் 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்! | Gang Rape Of 15 Year Old Girl In Maharastra

அவரை தொடர்ந்து அவருடன் வந்த 5 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை சிறுமியிடம் காட்டி மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

6பேர் கைது

ஒருகட்டத்தில், தொல்லை தாங்க முடியாத சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். அதன் படி, போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவுந்த் பகுதியை சேர்ந்த ஓம் ராஜு டிம்போல், ஜெய், அனில் ஜாதவ், சுனில் ஜாதவ், சுபம் மற்றும் கிரண் ஜாவ்லே ஆகியோர் என தெரியவந்தது.