டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு - முதல் இடம் பிடித்தவர் யார் தெரியுமா?
ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் வழங்கும் பணக்காரர்கள் பட்டியலில், 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது.
பணக்காரர்கள் பட்டியல்
ஃபோர்ப்ஸ் வழங்கும் இந்த ஆண்டுக்கான உலக பில்லியனர்கள் பட்டியலில், 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கடந்த ஆண்டு 675 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது போன ஆண்டை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த முறை வெளியான இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
அவரது சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 116 பில்லியன் டாலர்கள். இதுவே சென்ற ஆண்டு மதிப்பு 83 பில்லியன் டாலராக இருந்தது. அந்த வகையில், 100 பில்லியன் டாலர் கொண்ட உலக பணக்காரர் கிளப்பில் நுழைந்த முதல் ஆசியர் என்ற பெருமையும் முகேஷ் அம்பானியை சேர்ந்துள்ளது.
சொத்து மதிப்பு
அடுத்தபடியாக அதானி குழுமத்தின் கௌதம் அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில் பாதாளத்தில் சரிந்த அதானி குழுமம், மிக வேகமாக மீண்டு வருகிறது.
இந்த இருவருக்கும் அடுத்ததாக இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக சாவித்ரி ஜிண்டால் உள்ளார். 33.5 பில்லியன் டாலர் அவரது சொத்து மதிப்பாகும். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பமான சாவித்ரி ஜிண்டால், இந்த ஆண்டின் மக்களவை தேர்தலில் மகன் நவீன் ஜிண்டாலுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் குடும்பமே பாஜகவில் சேர்ந்தனர்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 25 புதிய இந்திய கோடீஸ்வரர்களான ரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன் மற்றும் ரேணுகா ஜக்தியானி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
இந்தியாவின் 10 பணக்காரர்களின் முழுமையான பட்டியலில், 1.முகேஷ் அம்பானியின் (சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர்கள்) 2.கௌதம் அதானி (84 பில்லியன் டாலர்கள்) 3. ஷிவ நாடார்(36.9 பில்லியன்) 4. சாவித்ரி ஜிண்டால் (33.5 பில்லியன்) 5.திலீப் ஷங்வி (26.7 பில்லியன்) 6.சைரஸ் பூனாவல்லா (21.3 பில்லியன்) 7.குஷால் பால் சிங் (20.9 பில்லியன்) 8.குமார் பிர்லா - (19.7 பில்லியன்) 9.ராதாகிஷன் தமானி (17.6 பில்லியன்) 10.லட்சுமி மிட்டல் (16.4 பில்லியன் டாலர்கள்)