1 ரூபாய் வரி அளித்தால் தமிழ்நாட்டிற்கு 26 பைசா..? ஆனால் உ.பி'க்கு 2.2 ரூபாய் - ஏன்..?

Government Of India Uttar Pradesh India Tamil
By Karthick Feb 08, 2024 06:44 AM GMT
Report

நாட்டின் வரி பகிர்வு தொகை தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

வரி பகிர்வு

மத்திய அரசு மாநிலத்திற்கு சரியான முறையில் நிதியை வழங்கவில்லை என தென்மாநிலங்களை சேர்ந்த ஆளும் கட்சிகளான கர்நாடகாவின் காங்கிரஸ், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என கட்சிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்ற்ன.

for-1-rupee-tn-gets-26-paisa-up-gets-2-rupees

இந்த பிரச்னையை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரை "வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது" என அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பாகவே குற்றம்சாட்டி விட்டார்.

for-1-rupee-tn-gets-26-paisa-up-gets-2-rupees

அதனை தான் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும், தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் பேசி வருகின்றார். இந்நிலையில் தான் மத்திய அரசின் நிதி பகிர்வு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. திமுக எம்.பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பங்கஜ் சவுதரி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

1 ரூபாய்க்கு...

அதில், கடந்த 5 ஆண்டுகளில் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிடம் இருந்து வாரியாக ரூ.22.26 லட்ச கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் வருது - மாநில நிதி பகிர்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு..!

ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் வருது - மாநில நிதி பகிர்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு..!

இதே காலாண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ரூ.3.41 லட்சம் கோடி ரூபாய் வரியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிபகிர்வாக கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6.42 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திற்கு 6.91 லட்சம் கோடி ரூபாய் வரி விடுவிக்கப்பட்டுள்ளது.

for-1-rupee-tn-gets-26-paisa-up-gets-2-rupees

தமிழ்நாடு 1 ரூபாய் வரியாக அளித்தால், 26 பைசா திருப்பி அளிக்கப்படும் நிலையில், உத்திரபிரதேச மாநிலத்திற்கு 2.2 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.