இந்த கிராமத்தில் செருப்பு அணிந்தால் கடும் தண்டனை.. அதுவும் தமிழ்நாட்டில் - ஏன் தெரியுமா?
செருப்பு அணிவது மிகப்பெரிய குற்றம் என ஒரு கிராமம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செருப்பு
இந்தியவில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும், அதில் வாழும் கிராம மக்களுக்கும் அவர்களுக்கென ஒரு சொந்தமான மரபு மற்றும் அழகிய கதைகள் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு கிராமம் ஆச்சரியமளிக்கும் விதமாக மக்கள் செருப்பு அணிவதை தடை செய்துள்ளது.
கொடைக்கானலின் வனப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளகவி கிராமம் ஒரு சிறிய கிராமமாகும். இங்கு, யாரேனும் பாதணி அணிந்திருந்தால், அவர்களுக்கு கடும் தண்டனை வழக்கப்படுமாம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் சாலைகள் இல்லை. கிராமத்தை அடைய, கடினமான மலையேறித்தான் செல்ல வேண்டும். கிராமத்தின் நுழைவாயிலில் மக்கள் வழிபடும் புனிதமான பெரிய மரம் உள்ளது. அங்கு வசிப்பவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக மக்கள் செருப்பு அணிவதைத் தவிர்க்கிறார்கள்.
ஏன் தெரியுமா?
கிராம மக்கள் தங்கள் கிராமத்தை கடவுளின் வீடு என்று நம்புகிறார்கள், எனவே எவ்வளவு சூடான வானிலையிலும் மக்கள் செருப்பு அணிவதை பார்க்க முடியாது. இந்த நம்பிக்கைக்கு எதிராக யாராவது சென்றால், அவர்கள் தெய்வ குற்றத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.
கோடை காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும் என்பதால் வயதானவர்கள் மட்டும் செருப்பு அணிவார்கள். ஒவ்வொரு வீடுகளுக்கு இடையில் மற்றும் கிராமத்தின் முடிவில் 25 க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கிராமத்தில் ஒரே ஒரு சிறிய தேநீர் மற்றும் மளிகைக் கடை மட்டுமே உள்ளது. தனி நபர் அவர்களது அடிப்படைத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகரத்திற்குச் செல்ல வேண்டியது இருக்கும்.
இந்த கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் கிராமம் முழுவதும் இரவு 7 மணிக்கு உறங்கி விடுகிறது. 7 மணிக்கு மேல் சத்தம்போடவோ, இசை கேட்கவோ அல்லது அதிக சத்தத்துடன் ஒலி இசைக்கக்கூடாது என கூறப்படுகிறது.