பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி - என்ன தெரியுமா?
பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு மெஸ்ஸி சிறப்பு பரிசு அனுப்பியுள்ளார்.
மோடி பிறந்தநாள்
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவானும்,
அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசு அனுப்பியுள்ளார்.
2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்றபோது தான் அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் ஜெர்சியில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.
மெஸ்ஸி பரிசு
லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி டெல்லிக்கு செல்லும் மெஸ்ஸி,
பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். இதற்கிடையில், தங்கள் மாநிலத்துக்கும் வரும்படி மெஸ்ஸிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.