தயவு செஞ்சி பண்ணிடாதீங்க - இந்த உணவுகளை சுடவைத்து சாப்பிட்டால் அவை விஷமாம்!
நாம் அன்றாட உணவில் சாப்பிட்டு பழகிய உணவுகளையே மீண்டும் ஒரு நாள் சாப்பிடும் போது, திடீரென நமக்கு உடல் உபாதைகள் ஏற்படும். அப்படி சூடுசெய்து சாப்பிட தவிறக்கவேண்டிய சில உணவு வகைகளை இங்கு பார்ப்போம்.
சிக்கன் - சிக்கன் சாதரணமாக அதிகளவு புரோட்டின் உள்ளடக்கிய உணவாக உள்ளது. புரோட்டின் சத்து அதிகளவு கொண்ட உணவை சுடவைத்து சாப்பிடும் போது, அது உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
முட்டை - முட்டையும் புரோட்டின் அதிகமாக கொண்ட உணவு என்பதால், சூடுசெய்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என குறிப்பிடுகிறார்கள்.
கீரை - கீரை உணவில் நைட்ரைட் உள்ளது. ஆகையால் மீண்டும் சூடுபடுத்தி எடுத்துக்கொண்டால், உடலுக்கு தீங்கை விளைவிக்கும். அதிகபட்சமாக புற்றுநோயும் உண்டாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உருளைக்கிழங்கு - மண்ணில் விளையும் உருளைக்கிழங்கில் அதிகளவில் பாக்டீரியா இயல்பாகவே இருக்கும். ஆகையால் சுடவைத்து சாப்பிடும் போது, அந்த பாக்டீரியாக்கள் நச்சு தன்மை கொண்டவையாக மாறி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துமாம்.
பீட்ரூட் - கீரையை போன்றே பீட்ரூட் அதிகளவு நைட்ரைட்டை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே, சூடுப்படுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
காளான் - புரோட்டின் சத்தை அதிகமாக கொண்ட உணவாக இருக்கும் காளானை சூடுசெய்து சாப்பிடுவது, விஷமாக மாறலாம் என்றே கூறப்படுகிறது. விஷம் என்பது செரிமான கோளாறுகள் முதல் வயிற்று வலி வரை ஏற்படுத்த கூடும் என்பதால், இதனை சுடவைத்து சாப்பிடுவது நல்லது.
குறிப்பு : இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளே தவிர, ஊடகம் தன்னிச்சையாக வெளியிடும் செய்திகள் அல்ல.